கொரோனாவால் வீதியில் உயிரிழந்ததாக பொய்யாக பதிவிட்ட மற்றொருவர் கைது

கொரோனாவால் மரணித்தவர்களின் சடலங்கள் வீதிகளில் மீட்கப்பட்டதாக போலித் தகவலுடன் படங்களை சமூகவலை தளத்தில் பதிவிட்ட மற்றுமொரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியை சேர்ந்த 28 வயது இளைஞனே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதற்க்கு முன்னர் கடுகண்ணாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் சி.ஐ.டி.யினரால் கைது செயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

(முன்னர் கைது செய்யப்பட்டவரின் செய்தி)

கொரோனாவால் பலர் வீதியில் உயிரிழந்ததாக சமூகஊடகத்தில் பிரசாரம் செய்தவர் கைது