ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர்
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு எதிர்க் கட்சித் தலைவரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





