வீட்டுக் கதவுடைத்து, வீட்டிலிருந்தவர்களை தாக்கி நெல்லியடியில் கொள்ளை

வீடு புகுந்த முகமூடிக் கும்பல் வீட்டிலிருந்தவர்களைத் தாக்கி 6 பவுண் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் பகுதியில் இன்று காலை 13.46 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு திருடர்கள் உட்சென்றுள்ளனர். இதன்போது வீட்டில் வசித்தவர்கள் அபயக்குரல் எழுப்பியபோதும் அயலவர்கள் எவரும் உதவிக்கு வரவில்லை. அபயக் குரல் எழுப்பியவர்களையும் திருடர்கள் தாக்கியுள்ளனர்.

சுமார் ஒரு மணிநேரம் சல்லடை போட்டு தேடுதல் நடத்தி 6 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடித்துச் சென்றதாக வீட்டார் தெரிவித்தனர்.