கொழும்பு கிங்ஸ் அணியின் வீரருக்கு கொரோனா தொற்று

எல்.பி.எல் அணிகளில் ஒன்றான கொழும்பு கிங்ஸ் வீரர் ரவீந்தர்பால் சிங்கிற்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் சிலருடன் கனடா நாட்டு கிரிக்கெட் வீரர் ரவீந்தர்பால் சிங் நேற்றைய தினம்(18) இலங்கைக்கு வந்தார்.

இதன் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.