மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

நவம்பர் 27 மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கோரிய மனு யாழ் மேல் நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காட்டி எதிர்வரும் நவம்பர் 25ம் திகதி தொடக்கம் 27ம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது எனக் கோரி வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் மீதான வழக்கு விசாரணை இன்று(20) ஆரம்பமாகின.

இவ் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான சுமந்திரன், மணிவண்ணன், சயந்தன் ஆகியோர் மன்றில் பிரசன்னமாகியுள்ளனர்.
போரில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் தமது சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடாக இந்த நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்திருந்தன.

கடும் வாதப் பிரதிவாதங்களின் பின்னர் இந்த வழக்கினை மாகாண நீதிமன்றின்  நியாதிக்கத்திற்குள் ஆராயமுடியாதெனவும். இது தேசிய பாதுகாப்பிற்கு உட்பட்டதென கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.