கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளை தனது குழந்தையுடன் தப்பிச் சென்ற பெண்ணை தேடும் பணிகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.
27 வயதான குறித்த பெண் நேற்று முன்தினம்(19) இரவு 9 மணியளவில் தமது இரண்டு வயதுக் குழந்தையுடன் ஐ.டி.எச் மருத்துவனையில் இருந்து தப்பிச் சென்றார். இதனையடுத்து மேற்கொண்ட தேடுதலில் குறித்த குழந்தை மாத்திரம் எஹலியகொடை பகுதியில் உள்ள வீட்டிலிருந்து மீட்க்கப்பட்டது.
குறித்த பெண், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகிய நிலையில் தேசிய தொற்று நோய் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.





