ஊரடங்கு அமுலில் உள்ள பகுதியில் நிவாரணம் வழங்கக் கோரி மக்கள் போராட்டம்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட கொழும்பு மாவட்டத்தின் மோதரை, இக்பாவத்தை பகுதியைச் சேர்ந்த மக்கள் தமக்கான நிவாரண உதவிகளை வழங்கக்கோரி இன்று(21) பேராட்டமொன்றை நடத்தினர்.

கடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் தாம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு தமது வாழ்வாதாரம் முழுமையாக இழக்கப்பட்டுவிட்டது. இதற்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி பகுதி மக்கள் அளுத்மாவத்தை வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள்.