ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாத சுமந்திரன் ஆயுதப் போராட்டத்தில் மரணமடைந்தவர்களை எவ்வாறு ஏற்றுக் கொள்வார் என சுரேஷ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த பண்டிதர் என அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனது வீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதினார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வீடுகளில் வைத்து எல்லோரும் விளக்கேற்றலாம். அதில் யாருக்கும் எந்தத் தடையும் இல்லை. அவர் துயிலுமில்லத்திற்கு வந்து அஞ்சாது விளக்கேற்ற வேண்டும்.
சுமந்திரன் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாதவர் என்பது வெளிப்படையாக தெரிந்த உண்மை. அவ்வாறு இருக்கையில் ஆயுதப் போராட்டத்தின் போது உயிர்நீத்தவர்களை எவ்வாறு ஏற்றுக்கொள்வார், என கேள்வியெழுப்பினார்.





