தேர்தலில் ரணில், சஜித், சந்திரிக்கா ஒரே கூட்டணியில்! அநுரவை வீழ்த்த வியூகம்

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரின் அணிகள் கூட்டாக இணைந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த முன்னாள் எம்.பி.க்கள் தலைமையில் கொழும்பில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.இது குறித்த தகவல் வரும் 27 ஆம். திகதி வெளியிடப்பட உள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரை ஒன்றிணைப்பதற்காக கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற ஆலோசகருமான ஆசுமாரசிங்க வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

மேலும் ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இது தொடர்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனரா? இல்லையா? என்பது இரகசியமானது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகி யோரின் அணிகள் கூட்டாக இணைந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை களை ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.