தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அக்கறையீனம் காரணமாகவே மாகாண சபைகள் செயலிந்து போயுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் அமைந்துள்ள தற்போதைய அரசாங்கம் உரிய நேரத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் பிரதிநிதிகளிடம் ஆட்சியதிகாரத்தினை ஒப்படைக்கும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபை தேர்தல்கள் நடாத்தப்படாமையினால் அனைத்து மகாண சபைகளும் நீண்ட காலமாக ஆளுநர்களினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. மாகாண சபை தேர்தல்கள் கடந்த நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களும் அவர்களுக்கு முட்டுக் கொண்டுத்துக் கொண்டிருந்தவர்களும் செய்திருக்க வேண்டிய வேலை. அவர்கள் அதில் அக்கறை செலுத்தவில்லை. எனினும், இந்த அரசாங்கம் நிச்சியமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும். அதில் யாரும் எந்தவிதமான சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை, எனதெரிவித்துள்ளார்.





