மன்னார் கிராம அலுவலகர் கொலை வழக்கு சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம சேவகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தில் செய்யப்பட்ட சக பெண் கிராம சேவகரின் கணவரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகள் மன்னார் நீதவான் எம். கணேசராஜா முன்னிலையில் இன்று (23) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போதே விளக்கமறியல் மேலும் 14 நாட்கள் நீடிக்கப்படுவதாக நீதவான் உத்தரவிட்டார்.

 

மன்னார் கிராம அலுவலகர் கொலை வழக்கு விசாரணைகளை சிஐடி பொறுப்பேற்றது