கிளிநொச்சியில் ஒயில் கடை வியாபாரிக்கு கொரோனா, சமூகத்தொற்று அபாயம் ?

கிளிநொச்சி 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடை நடத்தும் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. குறித்த நபர் நேற்று(23) காய்ச்சல் என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கோரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பப்பட்டன.

அத்துடன், அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது. அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் கிளிநொச்சியில் அண்மைய நாள்களில் நடமாடிய இடங்கள் மற்றும் தொடர்புகொண்டவர்களைக் கண்டறிவதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் அவரது ஒயில் கடைக்கு அருகில் உள்ள கடைகளை மூடி தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் கிளிநொச்சியில் உள்ள பாடசாலைகளை மூடுமாறும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்

 

மறு அறிவித்தல் வரை கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மூடப்படுகிறது