நியூ டயமண் கப்பல் தொடர்பில், கடல் சுற்றுச் சூழல் பணியாளர்களுடன் சட்டமா அதிபர் கலந்துரையாடல்

நியூ டயமண் கப்பலினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவின் கடல் மாசுபாட்டினை ஆய்வு  செய்வதற்கான கலந்துரையாடல்களுக்காக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் மற்றும் நிபுணர் குழுவின் பணியாளர்களை சட்டமா அதிபர் கலந்துரையாடினார்.

நியூ டயமண்ட் கச்சா எண்ணெய் கப்பலானது குவைத் துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பாரதீப் துறைமுகத்திற்கு 270,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை கொண்டு சென்று கொண்டிருந்தபோது, ​​இலங்கையின் கிழக்கு கடலில் வைத்து 2020 செப்டம்பர் 03 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதுக்கு.