கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு எதிராக சுற்றுச்சூழல் நீதி மையம் 2015 இல் தாக்கல் செய்த ரிட் மணுக்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று(25) தள்ளுபடி செய்யப்பட்டது.
கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் போது சுற்றுச்சூழல் சட்டங்களை மீறுவதாகவும், சரியான நடைமுறைகளை பின்பற்றாததாகவும் ரிட் மணு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ் வழக்கு தொடர்பான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நவாஸ் தள்ளுபடி செய்துள்ளார்.





