யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற வணிகமாணி மூன்றாம் வருட முதலாம் அரையாண்டுக்கான பரீட்சைகளை எதிர்வரும் டிசெம்பர் 05 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்ட நிலையில் நாட்டில் எழுந்துள்ள நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பரீட்சைகளை நடாத்துவது தொடர்பில் இம்மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் முகாமைத்துவச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே இந்தப் பரீட்சைகளை எதிர்வரும் டிசெம்பர் 05 ஆம் திகதி முதல் நடாத்துவதற்குத் துணைவேந்தர் அனுமதியளித்துள்ளதாக துணைவேந்தர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.





