வெல்லம்பிட்டியில் 4 பகுதிகள் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல்

வெல்லம்பிட்டியில் 4 பகுதிகள் நாளை(30) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என ராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளிலிருந்து பல கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்தா சேவனா வீட்டு வளாகம், ராண்டியா உயனா வீட்டுவசதி வளாகம், சலாமுல்லா மற்றும் விஜயபுரா கிராம சேவை பிரிவுகள் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும்.