முத்தரப்பு பாதுகாப்பு பற்றிய பேச்சுக்களுக்காக கொழும்பிற்கு வருகைதந்த இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் நேற்று(29) நாட்டை விட்டு புறப்பட முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அழைத்து மூடிய அறைக்குள் சுமார் முப்பது நிமிடங்கள் வரை பேச்சுவார்த்தை நடத்தினர்.
அஜித் டோவல் கொழும்பை விட்டு புறப்பட முன்னர் கொழும்பில் உள்ள இந்த தூதுவரின் இல்லத்திற்கு சம்பந்தனை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இச் சந்திப்பில் இலங்கையின் அபிவிருத்தி, வடக்கு கிழக்கு அபிவிருத்தி உட்பட பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.





