பருத்தித்துறையில் வாள்வெட்டு! முதியவர் படுகாயம், 3 வீடுகள் சேதம், ஒருவரை காணும்

வடமராட்சி, பருத்தித்துறையில் வாள்வெட்டுக்குழுவின் அட்டூழியத்தில் ஒருவர் காணமல் போயுள்ளதோடு, முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் 3 வீடுகளும் சேதமாக்கப்பட்டுள்ளன

பருத்தித்துறை வல்லிபுரக்குறிஞ்சி சிங்கைநகர் பகுதியில் உள்ள குறித்த வீட்டாருக்கு சொந்தமான பிறிதொரு இடத்தில் இருக்கும் காணியில் ஒரு குழுவினர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த காணியின் உரிமையாளர் எச்சரித்த நிலையில் குறித்த சட்டவிரோத மணல் அகழ்வுக்குழு நேற்று முன்தினம்(28) நள்ளிரவு வீடு புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாததால் அயல் வீட்டில் தங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது 68 வயதுடைய முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மேலும் இதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் காணிக்குரிய சொந்தக்காரர் கிருஷ்ணனபிள்ளை பிரதீபன் என்பவர் நேற்று மாலை முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடி தண்ணீர் எடுப்பதற்காக சென்ற நிலையிலேயே குறித்த நபர் காணாமல் போயுள்ளார். இந் நிலையில் குறித்த நபரின் மோட்டார் சைக்கிள் சேதமாக்கப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டது.