மரண தண்டனைக் கைதியின் பதவியேற்பு தொடர்பில் சபாநாயகரின் கருத்து

மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பிரேமலால் ஜயசேகர தெரிவாகியுள்ளார். சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள சகல சிறப்பு உரிமையும் பிரேமலாலுக்கும்  இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு நடவடிக்கைகளை சபையில் மேற்கொண்டிருந்தனர். அதற்கு  பதிலளிக்கும் வகையில் அரசியலமைப்பின் குறித்த சரத்தை சபையில் வாசித்துக் காட்டி சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.