அட்டுலுகம பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா வைரஸ் தொற்றாளரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. நேற்று முன்தினம்(02) குறித்த கொரோனா தொற்றாளரை அழைத்துவர சென்றபோது அவர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியதோடு, வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.





