மஹர சிறையின் அனைத்து கைதிகளுக்கும் கொரோனா ஆன்டிஜன் பரிசோதனை

மஹர சிறைச்சாலையின் அனைத்து கைதிகளுக்கும் கொரோனா ஆன்டிஜன் பரிசோதனைக்கு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந் நடவடிக்கைகளை வார இறுதியில் முன்னெடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கூறினார்.

மஹர சிறைச்சாலையில் தற்போது 2,800 இற்கும் அதிக கைதிகள் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார். இதுவரை 1,382 கைதிகளுக்கு கொரோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.