லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் டிரெய்லரை வரும் ஜனவரி 1ந் தேதி அதிகாலை ஒரு மணிக்கு படக்குழுவினர் வெளியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாஸ்டர் திரைப்படத்தினுடைய டீசர் கடந்த தீபாவளி அன்று வெளியாகி 4.3 கோடி பார்வையாளர்களுடன் தொடர்ந்து வைரலாகி வருகின்றநிலையில், தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் டிரெய்லருக்கு விஜயின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.





