ஈழத்தின் சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஆறுமுக நாவலரின் 141வது நினைவு தினம் இன்றாகும். சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காக இவர் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.
சைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு தமது இல்லத்தில் வித்தியானு பாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். மேலும் திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டு வெளியிடடார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.





