இலங்கை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேலை சந்தித்தார்.
குறித்த சந்திப்பு நேற்றய தினம்(9) கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரத்தில் இடம்பெற்றது.

இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, விவசாயம், வீட்டுத்திட்டங்கள், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுவரும் இந்திய கலாச்சார மையத்தின் கட்டுமானம் போன்ற பல்வேறு விடையங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலின் போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கு அங்கஜன் இராமநாதனால் நினைவுபரிசு ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு.வினோத் கே ஜேக்கப் அவர்களும் ஏனைய தூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர்





