கூட்டமைப்பின் பேச்சளார் விவகாரம் இன்றும் பிற்போடப்பட்டது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் விவகாரத்தை எதிர்வரும் 22ம் திகதி தீர்மானிப்பது என முடிவெடுக்கப் பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று(09) காலை கொழும்பில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய புளொடினுடைய தலைவர் சி.சித்தார்த்தன் கலந்து கொள்ளவில்லை. இதனால் பேச்சாளர் தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவில்லை.

இதன்படி 22ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பேச்சாளரை தீர்மானிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.