கிளிநொச்சியில் காணாமற்போயிருந்த காதல் ஜோடிகள் உடல் சிதைவடைந்த நிலையில் மீட்பு(படங்கள்)

கிளிநொச்சியில் காணாமற்போயிருந்த காதல் ஜோடிகள் 7 நாள்களின் பின் தூக்கில் தொங்கி சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களது சடலங்கள் பரந்தன் ஓவிசியர் கடைச் சந்திக்கு அண்மையாகவுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றுக்குள் சிதைவடைந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி குமரபுரத்தைச் சேர்ந்த இளைஞனும் திருநகரைச் சேர்ந்த இளம் பெண்ணும் கடந்த 3ஆம் திகதி முதல் காணாமற்போயிருந்த நிலையில் இன்று இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.