இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் விதிக்காது – இராணுவத் தளபதி

இன்று (24) நள்ளிரவு முதல் இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் விதிக்காது என இராணுவத் தளபதி சர்வேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் இன்று காலை 06.00 மணி முதல் திருகோணமலையில் உள்ள அபயாபுர கிராம சேவகர் பிரிவு மற்றும் ஜின்னா டவுன் ஆகிய பகுதிகளை மட்டுமே தனிமைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.