தமிழ் அரசியல் கைதிகளென சிறையில் எவருமில்லை – உதய கம்பன்பில

இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதல்ல என அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தாம் வகிக்கும் அரசியல் செயற்பாட்டால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுபவர்களையே அரசியல் கைதிகள் என கூற முடியும். இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களே தற்போது உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கருத்து ஆளுந்தரப்பில் ஏற்புடைய காரணியல்ல, என்றார்.