இலங்கையில் பிறந்து 20 நாட்களேயான சிசு கொரோனா தொற்றால் உயிரிழப்பு

இலங்கையில் பிறந்து 20 நாட்களேயான சிசு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது. கொழும்பு சீமாட்டி றிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் நேற்றிரவு குறித்த சிசு உயிரிழந்துள்ளது.

நாட்டில் கொரோனனாவல் இறந்த வயதில் குறைந்த சிசுவாக குறித்த சிசு கருதப்படுகிறது.

உயிரிழப்புக்கான காரணம் நிமோனியா காய்ச்சல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிசுவின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, குறித்த சிசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.