இலங்கையை மிரட்டும் புதியவகை வைரஸ் தொற்று! இதுவரை 500 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில் லீஷ்மேனியாசிஸ் என்னும் மற்றுமொரு ஆபத்தான நோய்த் தொற்றும் பரவி வருகின்றது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, நாச்சாதுவ, தலாவ தம்புதேகம பகுதிகளில் இந் நோய்த்தொற்று பரவியுள்ளது.

இந் நோய்த் தொற்றால் 500 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதர்களை தாக்கும் லீஷ்மேனியாசிஸ் உலகில் ஒன்பதாவது இடத்தில் உள்ளதென கூறப்படுகிறது.

இது ஒரு ஒட்டுண்ணி நோயாகும். 98 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.