பிரதமர் பதவியில் இருந்து விலகும் படியான எவ்வித எண்ணமும் தனக்கு இல்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மகிந்த ராஜபக்ஸ இரண்டு வருடங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வௌியாகியிருந்தாலும் அப்படியான எதுவித எண்ணமும் எனக்கு இல்லை.
என்னை ஐந்து வருடங்களுக்கு மக்கள் தெரிவு செய்துள்ளனர், பதவிக்காலம் நிறைவடையும் முன்னர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் எனக்கு இல்லை எனவும் பிரதமர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.





