மருதனார்மடம் சந்தையில் பி.சி.ஆர் சோதனைகள் சற்றுமுன் ஆரம்பம்

மருதனார்மடம் பொதுச்சந்தை கட்டிட தொகுதியில் உள்ள வர்த்தகர்கள், மரக்கறி வியாபாரிகள் உள்ளிட்டவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று(12) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மருதனார்மடம் பகுதியில் எழுமாற்றான முறையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஆட்டோ சாரதி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை நேற்று(11) உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர் மருதனார்மடம் சந்தையில் மரக்கறி வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து மருதனார்மடம் பொதுச் சந்தை கட்டிட தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள், ஊழியர்கள் மற்றும் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் உள்ளிட்டவர்களிடம் இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.