யாழ்பாணம் சுண்டுக்குளி குருசர் வீதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று அதிகாலை வேளையில் இனம் தெரியாத நபந்களினால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டதோடு வீட்டின் கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டன.
வீட்டில் உள்ள அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளை இனம்தெரியாத கும்பல் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் வீட்டின் முற்றத்தில் நின்ற மோட்டார் சைக்கிள்களை தியிட்டும் கொழுத்தியுள்ளது. இதில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்துள்ள நிலையில் மற்றைய மோட்டார் சைக்கிள் பகுதியளவில் எரிவடைந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பற்றிய தீ அருகில் இருந்த தளபாடத்திலும் பற்றியுள்ளது. பின்னர் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





