சுப்பிரமணியப் பாரதியாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

மகாகவி சுப்ரமணியப் பாரதியாரின் நினைவு தினம் இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நல்லூர் பின்வீதியில் உள்ள பாரதியார் சிலையடியில் இன்று காலை இடம்பெற்றது.     

இந்தியத் துனைத் தூதர் பாலச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ வீ கே சிவஞானம், யாழ் மாநகர சபை மேஜர் ஆனோல்ட், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், கஜதீபன், யாழ் மாநகர சபை ஆணையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.