மருதனார்மடம் பொதுச் சந்தை மறு அறிவித்தல் வரை பூட்டு – மாவட்ட அரசாங்க அதிபர்

மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

உடன் அமுலுக்கு வரும் வகையில் நாளை(12) காலை தொடக்கம் மறு அறிவித்தல்வரை மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டிய வர்த்தக நிலையங்கள் மூடப்படுகின்றன.

வர்த்தகர்கள் உதவியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய இடங்கள் தொடர்பில் சுகாதாரத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.