யாழ் மாவட்ட கொரோனா முடிவுகளில் மீண்டும் குழப்பம். நேற்றைய தினம் யாழ் மாவட்டத்தில் 26 கொரோனா தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்திருந்த நிலையில் தேசிய கொரோனா தடுப்பு செயலணியின் கடந்த 24 மணிநேர அறிக்கையையில் யாழ் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களின் விபரம் வெளிவரவில்லை.
இதே போல் தேசிய கொரோனா தடுப்பு செயலணியின் நேற்றைய(13) அறிக்கையில் 36 பேர் அடையாளம் காணப்பட்டனர் என இருந்தது. எனினும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் 6 பேருக்கு மாத்திரமே கொரோனா தொற்று உள்ளதாக கூறியிருந்தார்.
இவ்வாறு தொடர்ந்து இரு நாட்களாக யாழ் மாவட்ட கொரோனா விபரங்கள் தொடர்பில் மாறுபட்ட தகவல்கள் வெளிவந்து மக்கள் குழப்பமடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தவும்.






