“சுப்பர் முஸ்லிம்” என்ற பெயரில் கல்முனையை மையமாகக் கொண்டு இஸ்லாமிய மதவாதக் குழுவொன்று உருவாகி வருகின்றமை தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது என பிரபல சிங்கள மொழி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதாக யாழ் பிராந்திய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவராக கலன்தர் லெப்பை மொஹமட் என்ற நபர் செயற்பட்டு வருகின்றார் என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நபர் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என்றும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுடன் இணைந்து 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்திற்காக சேர்க்கப்பட்ட பணம் ஊடாக முறையற்ற விதத்தில் இந்த அமைப்பை அவர் ஆரம்பித்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டு சுப்பர் முஸ்லிம் என்ற அமைப்பை ஆரம்பித்து அதனூடாக இனவாத செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன என அச் சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இவ் அமைப்பில் 300 வரையான உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். தற்போது ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்துள்ளனர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. (ஈழநாடு)






