உலகளவில் ஒப்புதல் அளிக்காத மருந்துகளை ஊக்குவிக்க வேண்டாம் – ரணில் விக்கிரமசிங்க

உலகளவில் ஒப்புதல் அளிக்கப்படாவிட்டால், கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறும் மருந்துகளை ஊக்குவிக்க வேண்டாம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,

கொரோனா வைரஸை குணப்படுத்துவதாகக் கூறி உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகளை ஊக்குவிக்கும் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பற்றவர்கள்.

இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தால் அனுமதிக்கப்படாத மருந்துகளை முறையான ஆராய்ச்சி அல்லது ஒப்புதல் இல்லாமல் ஊக்குவிக்கக்கூடாது என அவர் மேலும் கூறினார்.

அண்மையில் பல எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் ருசித்த ஆயுர்வேத மருந்தின் மாதிரியைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த வாரம் கெகல்லில் கூடியிருந்ததை அடுத்தே முன்னாள் பிரதமர் இக் கருத்தினை கூறியுள்ளார்.