மம்தா பானர்ஜி அரசை சட்டசபைத் தேர்தலில் தோற்கடிக்க பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளதாகவும் அது நடைபெறாத பட்சத்தில் அவரை கூலிப்படை மூலம் கொலை செய்ய ப.ஜ.க திட்டமிட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரான சுப்ரதா முகர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மம்தா பானர்ஜி அரசை சட்டசபைத் தேர்தலில் தோற்கடிக்க பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. தோற்கடிக்க முடியாத பட்சத்தில் அவரை கூலிப்படை மூலம் கொலை செய்துவிட்டு மற்றவர்கள் மீது பழி போடக்கூடும் என்றார்.





