பஸ்களில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்கத் தடை!

பொது போக்குவரத்து சேவைகளில் நின்று கொண்டு பயணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது

தனிமைப்படுத்தல் கட்டளையின் விதிமுறைகளுக்கு அமையவே இத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என பதில் பொலிஸ் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

“தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக மட்டுமே பொதுமக்கள் பயணிக்க முடியும். இந்த நடைமுறையை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.