பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு கொரோனா

பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

42 வயதான அவர் கொரோனாவுக்கான அறிகுறிகளை கொண்டிருந்த நிலையில் பரிசோதனையை மேற்கொண்ட போதே தொற்றுக்கு உள்ளாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த வாரம் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.