பண்டிகை காலங்களில் நாட்டின் நிலமை குறித்து முடிவெடுக்கும் போது இவ் வார இறுதியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் கவனத்தில் கொள்ளப்படும் என கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஊரடங்கு உத்தரவு விதிக்கவோ அல்லது பண்டிகை காலத்தில் பிரதேசங்களை தனிமைப்படுத்தவோ இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
மக்கள் அதிக பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். முடிந்தவரை மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்க வேண்டும் என இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டார்.





