வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் முடிவுக்கு அமைவாக 2ம் தவணைப் பரீட்சை 02.10.2020 – 09.10.2020 காலப்பகுதியில் நடாத்தப்பட உள்ளது.
தரம் 2 தொடக்கம் தரம் 10 வரையான மாணவர்களுக்கு இப்பரீட்சை வலய மட்டத்தில் இடம்பெறவுள்ளது.
மாணவர்களின் தற்போதைய நிலையை அறிவதற்கும் அவர்களை கற்றலில் உற்சாகப்படுத்தலுக்கும் ஏற்ற வகையில் வினாத்தாள்களை தாயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
தரம் 11 ற்குகான வினாத்தாள்கள் மாகாண மட்ட பொதுப்பரீட்சையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வினாத்தாள்களும், புள்ளித்திட்டங்களும் மென்பிரதிகளாக வலயங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் திங்கள்கிழமை (14.09.2020) அறிவிக்கப்படும் என மாகாண கல்வித் திணைக்கள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.






