2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக வறிதாகியுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் பதவிக்குரிய தெரிவு எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக் நிறஞ்சன் விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்டிருந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு கடந்த 16 ஆம் திகதி மேலதிக 3 வாக்குகளனால் தோற்கடிக்கப்பட்டது. இதனால் சட்ட ஏற்பாடுகளுக்கமைய முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டது.





