வவுனியா குருமன்காட்டில் 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இன்று திங்கட்கிழமை வெளிநாடு செல்லும் நோக்கில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு வருகை தந்து குருமன்காட்டில் உள்ள அவரது நண்பருடன் தங்கியிருந்துள்ளார்.
அதன் பின்னர் சனிக்கிழமை மாலை வெளிநாடு செல்வதற்காக கொழும்பிற்கு சென்றுள்ளார். வெளிநாடு செல்வதற்காக அந்த மாணவனுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்ட சமயத்தில் அதன் முடிவுகள் நேற்றிரவு 9 மணியளவில் வெளியானது இதில் அவருக்கு தோற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனை அடுத்து அவர் வுனியாவில் தங்கியிருந்த நண்பர்களின் வீடு சுகாதாரப் பிரிவினர் நேற்று முடக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பல்கலைக்கழக மாணவன் நடமாடிய இடங்களில் தொடர்பிலான விசாரணைகளையும் சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். (கலைக்கதிர்)





