30 குழந்தைகளைக் கடத்தி விற்ற சந்தேக நபருக்கு பிணை

பணத்திற்காக 30ற்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தலா 2 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் பிணை நிபந்தனைகளின் கீழ் குறித்த சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி சந்தேக நபர் மீள மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 

30 குழந்தைகளைக் கடத்தி விற்றவர் மாத்தளையில் கைது