மாணவர்களை பல்கலைக் கழகங்களில் இணைக்க இடைக்கால தடையுத்தரவு கோரிய மனு நிராகரிப்பு!

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகங்களில் பொறியியல் மற்றும் பௌதீக விஞ்ஞான பீடங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு இடைக்கால தடையுத்தரவை கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாது உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.