கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவிலில் பகுதியில் உள்ள வீடொன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஒரு ஆண் மற்றும் இரு பெண்களையும் எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோண்டாவில் உப்புமடம் சந்திக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெறுவதாக அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் யாழ் மாவட்ட சிறப்பு பொலிஸ் பிரிவினர் அந்த வீட்டை நேற்று சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தினர்.
அதன்போது கோப்பாய் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கொடிகாமம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவரும் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதன் போது யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன், சந்தேக நபர்களை ஜனவரி 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.





