கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் நாற்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட 14 பேர் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சட்ட மருத்துவ அதிகாரி சிவரூபன், இரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது.
1. சின்னையா சிவரூபன்
2. சி.ஐ. இரகுபதி சர்மா
3. எட்வேட் சாம் சிவலிங்கம்
4. தங்கவேல் சிவகுமார்
5. நாகலிங்கம் மதனசேகர்
6. தேவசகாயம் உதயகுமார்
7. குலசிங்கம் குலேந்திரன்
8. றுபட்ஷன் யதுஷன்
9. சேவியர் ஜோண்ஷன் டட்லி
10. தாவீது நிமல்ராஜ் பிரான்சிஸ்
11. விநாயகமூர்த்தி நெஜிலன்
12. இரத்தினம் கிருஷ்ணராஜ்
13. சின்னமணி தனேஸ்வரன்
14. ஞானசேகரம் ராசமதன்
ஆகியோரே சிறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.





