மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் 2 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று (01) வெள்ளிக்கிழமை 240 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மருதனார் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய இருவருக்கே தொற்று உள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தபட்டவர்கள் என்றும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 133ஆக உயர்வடைந்துள்ளது.





